உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சையில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-03-15 09:31 GMT   |   Update On 2023-03-15 09:31 GMT
  • பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
  • ஏராளமான மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் நெகிழி இல்லாத மாவட்டமாக விளங்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி, கவின்மிகு தஞ்சை இயக்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டியை நடத்தியது.

புதிதாக திறக்கப்பட்ட ஸ்கேட்டிங் தளத்தில் இருந்து தொடங்கப்பட்ட இந்த போட்டியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமான மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.

இந்த நிகழ்ச்சியில் ஆணையர் சரவணகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் குணசேகரன், ரவிக்குமார், கவின்மிகு தஞ்சை இயக்கம் டாக்டர் ராதிகா மைக்கேல், இந்தியா ரெட் கிராஸ் துணைத் தலைவர் பொறியாளர் முத்துக்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News