உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில், வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-08-25 10:20 GMT   |   Update On 2023-08-25 10:20 GMT
  • சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • தொடர்ந்து 3 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கடந்த 2 நாட்களாக பணிகளை புறக்கணித்து ஆர்ப்பர்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 3-வது நாளாகவும் பணிகளை புறக்கணித்து ஒருங்கிணைந்த கோர்ட் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார்.

செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் தலைவர் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தொடர்ந்து 3 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags:    

Similar News