தஞ்சையில், காமராஜர் மார்க்கெட் திறப்பு விழா; இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- காமராஜர் மார்க்கெட்டில் 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன.
- குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சையின் மையப்பகு தியில் காமராஜர் மா ர்க்கெட் செயல்பட்டு வந்தது.இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்த மார்க்கெட்டை புதுப்பித்து பல்வேறு வசதிகளுடன் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதனால் இங்கிருந்த கடைகள் தஞ்சை மாதாக்கேட்டை சாலை காவேரி நகருக்கு தற்காலிமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது.
அங்கு தற்காலிகமாக காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வந்தன.இந்த நிலையில்பணிகள் அனைத்தும் முடிவடை ந்ததால் முறைப்படி இன்று காமராஜர் மார்க்கெட் திறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து காணொளி வழியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து காமராஜர் மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணக்குமார், மண்டல குழு தலைவர் மேத்தா , மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.20 கோடி செலவில் புதுப்பித்து கட்டப்பட்ட காமராஜர் மார்க்கெட்டில் 201 சிறிய அளவு கடைகளும், 87 பெரிய அளவு கடைகளும் உள்ளன. மேலும் மழைநீர் வடிகால் வசதி, வாகனம் நிறுத்துமிடம், திடக்கழிவுகளை கையாளும் வசதி, சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதி, மின் வசதி, தீயணைப்பு வசதி, குடிநீர் வசதி கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.