தஞ்சையில், மறைந்த முன்னாள் அரசு தலைமை கொறடா துரை.கோவிந்தராஜன் உருவப்படம் திறப்பு
- நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு துரை.கோவிந்தராஜன் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 17-ந் தேதி மரணம் அடைந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடக்கூரை சேர்ந்தவர் துரை.கோவிந்தராஜன் (வயது 90). இவர் தமிழக அரசின் முன்னாள் கொறடா ஆவார்.
இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 17-ந் தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில் துரை.கோவிந்தராஜனின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை காவேரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு துரை.கோவிந்தராஜன் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அ.ம.மு.க. துணை பொதுசெயலாளர் ரெங்கசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், பொருளாளர் மனோகரன், அமைப்பு செயலாளர் சீனிவாசன், வேங்கை கணேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோக்குமார், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, திராவிடர் கழக மண்டல தலைவர் அய்யனார், திருச்சி மாவட்ட த.மா.கா. தலைவர் குணா, தஞ்சை தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் புகழஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்க ளை அ.ம.மு.க. மருத்துவபிரிவு இணை செயலாளர் துரை.கோ.கருணாநிதி, வடக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் துரை.கோ.பாண்டியன், திராவிடமணி பால்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.