தஞ்சையில், இன்று விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
- விபத்தை தடுத்திட, பொது போக்குவரத்தை பலப்படுத்தி பொதுத்துறையை பாதுகாத்திட வலியுறுத்தி மாரத்தான்.
- 2 பிரிவுகளிலும் தலா 7 பேருக்கு ஆறுதல் பரிசு.
தஞ்சாவூர்:
சுற்றுசூழலை பாதுகாத்திட வேண்டும். விபத்தை தடுத்திட, பொது போக்குவரத்தை பலப்படுத்தி பொதுத்துறையை பாதுகாத்திட வலியுறுத்தி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம்- சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மண்டல தலைவர் காரல்மார்க்ஸ், பொது செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். போட்டியை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் ஆண்கள், பெண்களுக்கு தனி தனி பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.
போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.8000, ரூ.6000, ரூ.5000 மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.6000, ரூ.5000, ரூ.3000 மற்றும் 2 பிரிவுகளிலும் தலா 7 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
பரிசுகளை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், சி.ஐ.டி.யூ தமிழ்நாடு மாநில துணை பொது செயலாளர் திருச்செல்வன், மாநில செயலாளர் ஜெயபால், அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல், சின்னை.பாண்டியன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
போட்டியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் கண்ணன், எஸ்.இ.டி.சி- சி.ஐ.டி.யூ மாநில துணை தலைவர் வெங்கடேசன், சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர்கள் அன்பு, செங்குட்டுவன், எஸ்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஜீவா, திருநாவுக்கரசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மண்டல பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.