சேலம் மாவட்டத்தில் 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
- சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.
- அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 83.16 சதவீதம்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 239 மாணவிகளும், 7 ஆயிரத்து 851 மாணவர்களும் என 19 ஆயிரத்து 90 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 83.16 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
கடந்த 2020-ம் ஆண்டு அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 93.10 சதவீதம் ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 83.16 ஆக குறைந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள 158 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி 7 பள்ளிகள் பெற்றுள்ளது. அவைகள், ஏகலைவா உண்டு உறைவிட மகளிர் மேல்நிலைப்பள்ளி அபிநவம் மற்றும் கொங்கணாபுரம், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, எடப்பாடி, காடையாம்பட்டி மாதிரிப் பள்ளிகள் ஆகிய 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை நிகழ்த்தி உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.