உள்ளூர் செய்திகள்

திருவாரூரில், பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

Published On 2023-06-06 10:02 GMT   |   Update On 2023-06-06 10:02 GMT
  • ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் சிறப்பு பயிற்சி 3 நாட்கள் வழங்கப்பட்ட உள்ளது
  • சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்:

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளி வளாகங்களில் முளைத்துள்ள புல், பூண்டுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

பள்ளியின் கட்டடம் மற்றும் கழிப்பிடங்கள், குடிநீர் வசதிகளை கண்காணித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள், கழிப்பிடம் மற்றும் கட்டிட சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளில் பள்ளியின் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி திறப்பதை முன்னிட்டு மாவட்டத்தில் அனைத்தும் பள்ளிகளுக்கும், புத்தகங்கள் குறிப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி திறந்த அதே நாளில் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பிரிண்டர் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்பித்தல் பணி நடைபெற உள்ளதால் ஆசிரியர்களுக்கு அதற்கான சிறப்பு பயிற்ச்சியும் மூன்று நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளியில் நடைபெறும் தூய்மைப் பணிகளை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வித்துறை அலு வலர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News