உள்ளூர் செய்திகள்

பேரிடர் மீட்புக்குழுவை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டியில், பேரிடர் மீட்புக்குழு தொடக்கம்

Published On 2023-03-22 09:35 GMT   |   Update On 2023-03-22 09:35 GMT
  • பருவமழை காலங்களில் நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதமாக செய்து வருகிறது.
  • பேரிடர் உபகரணங்கள் செயல்விளக்கம் குறித்து பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவனம் சார்பில் பேரிடர் மீட்புக்குழு தொடக்க நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்:-

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதமாக செய்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்துடன் பாலம் சேவை நிறுவனம் இணைந்து பேரிடர் கால பணிகளை செய்து வருவதற்கும், தற்போது பேரிடர் மீட்புக்குழு அமைத்துள்ளதற்கும் நகராட்சி சார்பில் பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறினார்.

மாவட்ட பேரிடர் ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்வகணபதி பேசுகையில்:-

ஆபத்து காலங்களில் மீட்பு பணிகளில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும், அப்போது தான் பேரிடரி–லிருந்து அனைவரும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.

பேரிடர் மீட்புக்குழு செயல்பாடுகள் குறித்து பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் கூறும்போது, திருவாரூர் மாவட்டத்தில் முதன்முறையாக பாலம் சேவை நிறுவனம் பேரிடர் மீட்புக்குழுவை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி தொடங்கியுள்ளது.

மேலும், ஒரு லட்சம் மதிப்பிலான நவீன ஒலிபெருக்கி மீட்புகயிறு, ஸ்ரெட்சர், லைப் ஜாக்கெட், நவீன டார்ச்லைட் வாங்கப்–பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் மீட்புக்குழு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என்றார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சக்திவேல், ரமேஷ்குமார், வாசிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைதம்பி சரவணன், முன்கள மீட்பாளர் கண்ணதாசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேரிடர் உபகரணங்கள் செயல்விளக்கம் குறித்து பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

Tags:    

Similar News