உள்ளூர் செய்திகள்

பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில், பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் மானிய விலையில் உரம் வழங்க வலியுறுத்தல்

Published On 2023-04-17 08:17 GMT   |   Update On 2023-04-17 08:17 GMT
  • உரம் மற்றும் பூச்சி மருந்துகளை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்.
  • பருத்தி சாகுபடி பயிர்கள் 20 முதல் 90 நாட்கள் வரையிலான இளம் பயிர்களாக உள்ளது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் வருடம் தோறும் பருத்தி சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பருத்தி பஞ்சு கொள்முதல் விலை அதிகரித்து வருவதால் விவசாயிகள் ஆர்வமுடன் பருத்தி சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 16,261 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது.

பருத்தி சாகுபடிக்கு சாதகமான சீதோசன நிலை நிலவியதால் விளைச்சல் அதிகரித்தது.

அதற்கு ஏற்ற வகையில் பருத்தி பஞ்சின் கொள்முதல் விளையும் அதிகரித்தது.

இதனால் இந்த ஆண்டும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 16,500 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 500 ஹெக்டேர் வரை பருத்தி சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பருத்தி சாகுபடியினை பெரும்பாலும் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

தடையின்றி சொட்டு நீர் பாசனம் நடைபெறும் வகையில் 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மேலும் பருத்தி சாகுபடி பயிர்கள் 20 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரையிலான இளம் பயிர்களாக உள்ளது. இப்பயிர் நன்கு வளர உரம் தேவைப்படுகிறது.

பருத்தி செடிகளில் மாவு பூச்சி, அந்து பூச்சிகள் உள்ளிட்ட பூச்சிகள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதனால் பூச்சிகளிடமிருந்து பருத்தி பயிர்களை காப்பாற்றும் வகையில் விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அல்லது வேளாண் அலுவலகங்கள் மூலம் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பருத்தி பஞ்சுகளை கொள்முதல் செய்ய இந்திய பருத்தி கழகத்திலிருந்து முகவர்களை, மாவட்டங்களுக்கு நேரடியாக வரவழைத்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News