உள்ளூர் செய்திகள்

உப்பு உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

வேதாரண்யத்தில், உப்பு உற்பத்தி பணிகள் தீவிரம்

Published On 2023-08-05 09:10 GMT   |   Update On 2023-08-05 09:10 GMT
  • சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
  • உப்பள தொழிலாளர்கள் இரவு, பகலாக முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது.

தற்போது, கடந்த ஒரு வாரமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுமார் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் இரவு, பகலாக முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக லாரிகள் மூலம் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள உப்பை தார்ப்பாய் கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

Tags:    

Similar News