ஏற்காட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை
- ஏற்காடு மேல் அழகாபுரம் பகுதியில் அரசு மது பாட்டில்களை அரசுக்கு புறம்பாக விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- பக்கோடா பாயிண்ட் சாலையில் சோதனை செய்ததில் சுமார் 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராமச்சந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காவல் ஆய்வாளராக செந்தில் ராஜ் மோகன்பொறுப்பேற்றார் அதன் தொடர்ச்சியாக ஏள்காடு பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பபோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு இது வரை 30 க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் வழக்கு பதிந்து குற்றவாளிகளை சிறையில் அடைத்துள்ளார்.
மேலும் வளரும் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, விற்பனை செய்வோர். தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா பேதை பொருள் விற்பனை செய்தவர்கள் என 50 மேற்பட்ட வழக்குகள் பதிந்து குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று
ஏற்காடு மேல் அழகாபுரம் பகுதியில் அரசு மது பாட்டில்களை அரசுக்கு புறம்பாக விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும் ஏற்காடு போட்டுக்காடு கிராமத்தில் உள்ள அரசு மது கடையில் இருந்து ஆட்டோவில் மதுபாட்டில்கள் ஏற்றி வருவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
சோதனையில் முருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் ராமச்சந்திரன் (வயது 55) என்பார் அரசுக்கு புறம்பாக மது பாட்டில்கள் ஆட்டோவில் ஏற்றி வந்தது தெரியவந்தது இதை தொடர்ந்து மேல் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ரவி மகன் சதீஷ் (40) விற்பதாக தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பக்கோடா பாயிண்ட் சாலையில் சோதனை செய்ததில் சுமார் 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராமச்சந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சதீஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் போலீ–சார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.