ஸ்ரீவைகுண்டம் யூனியனில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா
- ஸ்ரீவைகுண்டம் யூனியனில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் நடைபெற்றது.
- ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசந்தா மணி, ஒன்றிய துணைத்தலைவர் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்று நடவு பணியை தொடங்கி வைத்தனர்.
தென்திருப்பேரை:
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், கால நிலை மாற்றத்தை வலி யுறுத்தியும் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவ ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்ட மைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசந்தா மணி, ஒன்றிய துணைத் தலைவர் விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்று நடவு பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி தன லட்சுமி மரக்கன்றுகள் நடவுப்பணியை மேற்கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் கூறியதாவது, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாட்டின் பசுமைப் போர்வையை மேம்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் முழு வதும் 10 ஆயிரம் மரக்க ன்றுகள் பாதுகாப்பான இடங்களில் எங்களது தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.