திருத்துறைப்பூண்டி இல்லம் தேடி கல்வி 2-ம் ஆண்டு தொடக்க விழா
- இல்லம் தேடி கல்வி 2-ஆம் ஆண்டு தொடக்க விழா திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
இல்லம் தேடி கல்வி இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ரேவதி வேதகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் தலைமை வகித்தார்.
ராமதேவர் சித்தர் அறக்கட்டளை மாநில தலைவர் முனைவர் ரவிச்சந்திரன் மற்றும் அன்பு உள்ளங்கள் சமூக அறக்கட்டளை நிறுவனர் ராஜாமணி இருவரும் முன்னிலை வகித்தனர்.
இல்லம் தேடி கல்வி மேற்பார்வையாளர் அனு பிரியா, சமூக ஆர்வலர் துரை முருகன் ஆகியார் சிறப்புரையாற்றினர்.
இந்திகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கெளரவி க்கப்பட்டனர்.
சேவா பாரதி - தமிழ்நாடு அமைப்பு சார்பாகவும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
அனைவருக்கும் கவிதா ரவிச்சந்திரன் மற்றும் தீபக் ரவிச்சந்திரன் இருவரும் சிற்றுண்டி வழங்கினார். சமூக ஆர்வலர் முருகவேல் ரவி நன்றி கூறினார்.