உடன்குடி சிவலூரில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா
- ரூ.28 லட்சம் செலவில் உடன்குடி யூனியன் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
- இதனை சென்னையில் இருந்து காணொலி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உடன்குடி:
உடன்குடி யூனியன் செட்டியாபத்து ஊராட்சி சிவலூரில் தமிழக அரசின் குழந்தைகள் நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.28 லட்சம் செலவில் உடன்குடி யூனியன் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
இதன் தொடக்க விழாவில் சென்னையில் இருந்து காணொலி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிவலூர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு உடன்குடி வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரெத்தினாவதி தலைமை தாங்கினார். செட்டியாபத்து ஊராட்சி தலைவர் க.பாலமுருகன் குத்து விளக்கு ஏற்றினார். சிவலூர் ஊர் தலைவர் முருகன், சுந்தர் விஜயன், ரவி, ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பவுலா ராதிகா வரவேற்றார். இதில் செட்டியாபத்து ஊராட்சிசெயலர் கணேசன் உட்பட ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினர். ஆசிரியை ராதை நன்றி கூறினார்.