உள்ளூர் செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் சேர்மன் ஜனகர் மரக்கன்றுகள் நடும்பணியை தொடங்கி வைத்தார்.

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடக்க விழா

Published On 2023-08-10 08:58 GMT   |   Update On 2023-08-10 08:58 GMT
  • கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • ஆழ்வை ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளிலும் தண்ணீர் வசதி உள்ள இடங்களில் மரக்கன்றுகளை பருவ மழைக்கு முன்னதாக அதாவது செப்டம்பர் முதல் வாரத்தில் நடவு செய்ய உள்ளோம்.

தென்திருப்பேரை:

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்ட மைப்பு), தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் வழிகாட்டுதலின்படி அரசு, பூவரசு, புங்கன், வேம்பு, வாகை, புளி, நாவல், சரக்கொன்றை, அலங்கார கொன்றை போன்ற 10 ஆயிரம் மரக்கன்றுகளை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடக்க விழா ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமையில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாக்கி யம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.

இவ்விழாவில் ஆழ்வார்தி ருநகரி ஊராட்சி ஒன்றியக் குழு சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசுகையில், ஆழ்வை ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளிலும் பாதுகாப்பான, தண்ணீர் வசதி உள்ள இடங்களில் மரக்கன்றுகளை பருவ மழைக்கு முன்னதாக அதாவது செப்டம்பர் முதல் வாரத்தில் நடவு செய்ய உள்ளோம்.

அதேசமயம் பனை மரங்கள் பாதுகாப்பு கூட்ட மைப்போடு இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம் என கூறினார்.

நிகழ்ச்சியில் ஆழ்வை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மகேந்திரபிரபு , துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, ராஜா, தாசன் மற்றும் அலுவலக பணியாளர்கள் , பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், சிகரம் அறக்கட்டளை இயக்கு னர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News