- அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்படக்கூடியது அறிவியல் மன்றம் ஆகும்.
- அமிலத்தன்மை நீக்கும் சோதனையை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித மற்றும் அறிவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, ஆடின் மெடோனா, உமா மகேஸ்வ ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவி மோனிகா அனை வரையும் வரவேற்றார்.
மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறை உதவி பேராசிரியர் விமலா கலந்து கொண்டு பேசுகையில்:-
கணித மன்றத்தின் மூலம் கணித புதிர்கள் மற்றும் கணித விளையாட்டுகள் வேதகால கணிதம் மற்றும் மின்னல் வேக கணிதம் அன்றாட வாழ்வில் கணிதத்தின் பயன்பாடுகள், போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஏதுவாக எளிய முறையில் கணித பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவை கணித மன்றத்தின் செயல்பாடுகள் ஆகும். மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு பயன்படும் அறிவியல் சார்ந்த பல செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்பட க்கூடியது அறிவியல் மன்றம் ஆகும் என்றார்.
பின்னர், திரவ அடர்த்தி வேறுபாடு சோதனையை சந்தோஷ், அமிலத்தன்மை நீக்கும் சோதனையை புஷ்பா ஆகியோர் செய்து காண்பித்தனர். முடிவில் மாணவி அகத்தியர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவி ஷாலினி தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள் பாஸ்கரன், சக்கரபாணி, நடராஜன், முகமது ரஃபீக், பாலசுப்பி ரமணியன் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் விஜயகுமார் செய்திருந்தனர்.