உள்ளூர் செய்திகள்

சிறந்த முறையில் கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கால்நடை மருந்தக கட்டிடம் திறப்பு

Published On 2023-07-16 09:35 GMT   |   Update On 2023-07-16 09:35 GMT
  • கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் கண்டறியப்படுகிறது.
  • கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர்:

திருவாரூர்அருகே பெரு ந்தரக்குடி ஊராட்சியில் கால்நடை மருந்தக கட்டடத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு கால்நடை மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

இச்சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் உள்ளிட்ட வைகள் மேற்கொள்ளப்படு கிறது. மேலும், ஸ்கேன் மூலம் கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளா றுகள் கண்டறியப்படுகிறது. இம்முகாமினை கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனைதொடர்ந்து, கால்நடைகளுக்கான தாது உப்பு, தீவனங்கள், புல் கரணைகள் உள்ளிட்ட வைகளை கால்நடை வளர்ப்போரிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார். வெள்ளாடு, நாய், ஆடு, மாடு உள்ளிட்ட 500 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பால் உற்பத்தியாளர் 3 நபர்க ளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவிக்கும் விதமாக 3 நபர்களுக்கும் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்வில், கொரடாச்சேரி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குநர் ஹமீது அலி, ஊராட்சி மன்றத்தலைவர் மதிவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவி யாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News