பற்களை பிடுங்கிய விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்
- அம்பை சரக பகுதியில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்ரகு விசாரணை நடத்தி வந்தார்.
- விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். சமர்ப்பித்த அறிக்கையின் அடிப் படையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்ரகு விசாரணை நடத்தி வந்தார்.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
இந்நிலையில் விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். சமர்ப்பித்த அறிக்கையின் அடிப் படையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக இன்ஸ் பெக்டர் உலக ராணி நியமி க்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று அனைத்து கோப்புகளையும் பெற்றுக் கொண்டார்.
குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பொன் ரகு, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி உலக ராணியிடம் ஒப்படைத்தார். இதனை யடுத்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் குழு இன்று முதலே தொடங்கியது.