கடலூரில் வாழைத்தார்கள் வரத்து அதிகரிப்பு
- வாழை மரங்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தி பூசணிக்காய் உடைத்து வெகு விமர்சை யாக கொண்டாடப்படு வது வழக்கம்.
- பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்கள் வாங்கு வதற்கு திரண்டு வந்தனர்.
கடலூர்:
நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு வீட்டில் பொறி, அவல் கடலை, பழ வகைகள் போன்றவற்றை வைத்து படைத்தும், வாகனங்களில் வாழை மரங்கள் கட்டி கோவிலுக்கு சென்று வாக னங்களை படைத்தும், வீட்டில் படைத்தும் மற்றும் வணிக நிறுவனங்கள் கடை களில் வாழை மரங்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தி பூசணிக்காய் உடைத்து வெகு விமர்சை யாக கொண்டாடப்படு வது வழக்கம். இந்த நிலையில் கடலூர் பகுதிகளில் நாளை ஆயுத பூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதச மியை முன்னிட்டு டன் கணக்கில் ஆயிரக்கணக் கான வாழைத்தார்கள் குவிந்து உள்ளது.
இதன் காரணமாக இன்று காலை முதல் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்கள் வாங்கு வதற்கு திரண்டு வந்தனர். இதில் 150 முதல் 300 ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடலூருக்கு வழக்கமாக 2 டன் வாழைத் தார்கள் வந்த நிலையில் விழாக்காலம் என்பதால் 4 டன் வரை தற்போது வாைழத்தார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் நாளை ஆயுத பூஜை என்பதால் வாழ்த்தார்கள் அதிகளவில் வரவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.