உள்ளூர் செய்திகள்

வட மாநிலத் தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு

Published On 2023-02-26 08:31 GMT   |   Update On 2023-02-26 08:31 GMT
  • பரமத்தி வேலுார் தாலுகா பகுதிக்கு, தற்போது வட மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர்.
  • தாலுகா முழுவதும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

பரமத்தி வேலுார்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் சுற்று வட்டாரப் பகுதிகளான பரமத்தி, கபிலர்மலை, இருக்கூர், ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், நல்லுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இரும்பு கம்பி தயார் செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு வகையான தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், வெல்லம் தயாரிக்கும்ஆலைகள் உள்ளிட்டவைகளில், அதிக ளவில் வடமாநிலதொழி லாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.

இதில் 90 சதவீதம் பேர் தங்கள் வேலை பார்க்கும் பகுதியிலேயே தங்கியுள்ளனர். சிலர் வாடகைக்கு வீடு எடுத்து, கூட்டாகவும் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு, பரமத்திவேலூருக்கு வந்து செல்கின்றனர். மேலும் வட மாநிலத்தவர்கள் அதிகளவில், டீ கடை மற்றும் சிறிய உண வகங்கள் வைத்து நடத்தி வரு கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளர்களின் புகைப் படம், முகவரி உள்ளிட்டவைகளை, போலீசார் வாங்கி பதிவு செய்து வந்தனர்.

ஆனால் தற்போது எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் எந்த ஊர், பெயர் உள்ளிட்ட எவ்வித விபரங்களும் பதிவு செய்யப் படாமலே உள்ளது. தொழிற் சாலை, கோழிப்பண்ணை மற்றும் ஆலை உரிமையாளர் களை அழைத்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்த போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும். வடமாநில தொழி லாளர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், அவர்க ளின் முழு விபரங்களையும் பெறவும் வேண்டும்.

பரமத்தி வேலுார் தாலுகா பகுதிக்கு, தற்போது வட மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர், தாலுகா முழுவதும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். போலீசார் அவர்களை கண்காணித்து அவர்களின் சொந்த முகவரி ஆவணங்களை பெற வேண்டும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News