உள்ளூர் செய்திகள்

கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை

Published On 2022-08-29 10:07 GMT   |   Update On 2022-08-29 10:07 GMT
  • கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் 21-வது மாவட்ட மாநாடு நாமக்கல் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது.
  • அதிகரித்து வரும் மணல், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் 21-வது மாவட்ட மாநாடு நாமக்கல் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவா் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் குமாா், மாவட்ட செயலாளா் வேலுசாமி வாழ்த்தி பேசினா். 17 போ் கொண்ட புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக

பாதுகாப்பு திட்டம்) பணியிடத்திற்கு முழு நேர அலுவலா் உடனடி யாக நியமிக்கப்பட வேண்டும். இதன்மூலம் தொழிலாளா்களுக்கு அரசு திட்டங்கள் உடனடியாக கிடைக்கும். மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்களை அமைக்கப்படும் என அரசாணை வெளியிட்டு 6 மாதங்களாகியும் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் கண்காணிப்பு குழு அமைக்கப்படவில்லை.

மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழுவை அமைத்து அதற்கான கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். அதிகரித்து வரும் மணல், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

Similar News