உள்ளூர் செய்திகள்
சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
- தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது.
- வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
சேலம்:
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கும் முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் 97.9 டிகிரி வெயில் பதிவானது.
நேற்று 97.8டிகிரியாக பதிவாகி உள்ளது. வெப்பநிலை அதிகரித்து வருவதால், மதிய நேரங்களில் கடை வீதிகளில் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக சேலத்தில் பழச்சாறு கடைகள், தர்பூசணி கடைகள், இளநீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக உள்ளது.