உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

Published On 2023-04-29 09:01 GMT   |   Update On 2023-04-29 09:01 GMT
  • வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருகின்றன.
  • குடியிருப்பு பகுதியையொட்டிய பகுதிகளில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

அரவேணு,

காடுகளும் மலைகளும் சூழ்ந்து வனவிலங்கு கூடாரமாக விளங்குவது தான் நீலகிரி மாவட்டம். மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருகின்றன.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கரடி, காட்டு யானைகள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியையொட்டிய பகுதிகளில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தற்போது விடுமுறை காலம் என்பதால் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. அவ்வாறு வரும் வாகனங்களை சில நேரங்களில் காட்டு யானைகள் வழிமறித்து வருகின்றன. அப்போது வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

இந்த நிலையில் கோத்தகிரி பகுதிகளில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காட்டு மாடுகள் சாலையோரம் மேயந்து கொண்டிருக்கின்றன.

சில நேரங்களில் சாலைகளிலும் ஒய்வெடுக்கின்றன.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள்.

எனவே வனத்துறையினர் காட்டு மாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News