உள்ளூர் செய்திகள்

உடன்குடி பஜார் பகுதியில் சாலையோரத்தில் நுங்கு விற்பனை நடைபெற்ற போது எடுத்தபடம்.

உடன்குடி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - நுங்கு விற்பனை ஜோர்

Published On 2023-06-15 08:46 GMT   |   Update On 2023-06-15 08:46 GMT
  • உடன்குடி பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வீட்டை விட்டு வெளியே வரமக்கள் தயங்குகின்றனர்.
  • கம்பங்கூழ், கேப்பை, மோர், நுங்கு போன்ற சாலையோர கடைகள் ஏராளமாக வந்து விட்டது.

உடன்குடி:

உடன்குடி வட்டாரபகுதிக்கு உட்பட்ட உடன்குடி, மெய்ஞானபுரம், பரமன்குறிச்சி பஜார் வீதிகள் தினசரி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

கம்பங்கூழ், மோர், நுங்கு

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வீட்டை விட்டு வெளியே வரமக்கள் தயங்குகின்றனர். வீடுகளிலும், தோட்டங்களிலும் முடங்குகின்றனர். அவசர தேவைக்கு மட்டுமே பஜார் வீதிக்கு வருகின்றனர்.இதனால் கம்பங்கூழ், கேப்பை, மோர், நுங்கு போன்ற சாலையோர கடைகள் ஏராளமாக வந்து விட்டது.

நுங்கு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் நுங்குகளை வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

மேலும் இளநீர், சர்பத் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை விற்பனை நடைபெறுகிறது. கோடைகாலத்தைவிட தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News