உள்ளூர் செய்திகள்

சீர்காழி நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது.

நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும் - கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Published On 2022-12-29 09:26 GMT   |   Update On 2022-12-29 09:26 GMT
  • சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்பாடமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.
  • பல்வேறு குறைகளை கூறி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

சீர்காழி:

சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி வளாகம் அவைகூடத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரிராஜசேகரன் தலைமை வகித்தார்.

நகராட்சி ஆணையர் வாசுதேவன், மேலாளர் காதர்கான், நகராட்சி பொறியாளர் சித்ரா, சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், ஓவர்சியர் விஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் முபாரக்அலி பேசுகையில், சீர்காழி நகரில் கடந்த சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்பாடமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.

இதனால் வார்டு பகுதிகளில் கடும் சுகாதாரசீர்கேடு நிலவுவதால் சீர்மிகு நகராட்சி சீர்கேடு அடைந்து வருகிறது. இதனால் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் மக்களிடம் அவப்பெயர் ஏற்பட்டுவருகிறது.

குப்பை களை அள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது மக்கள் சாலைமறியல் போரா ட்டம் நடத்தும் முடிவுக்கு வந்துள்ளனர். மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தானும் பங்கேற்பேன் என்றார்.

நகர்மன்ற உறுப்பினர் வள்ளிபேசுகையில், நாய்கள் தொல்லைஅதிக ரித்துவருவதை கட்டுப்ப டுத்தவேண்டும்.கொசு மருந்து தெளிக்கவேண்டும்.

இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடனடியாக வழங்காமல் அலைகழிப்பு செய்கின்றனர் என்றார். ஜெயந்திபாபுபேசுகையில், நகர்மன்ற உறுப்பினர்கள் முழுமதி இமயவரம்பன், ராஜேஷ், பாலமுருகன், சாமிநாதன் கிருஷ்ணமூர்த்தி வேல்முருகன், பாஸ்கரன், நாகரத்தினம், ரேணுகாதேவி, கலைசெல்வி, ரஹ்மத்நிஷா உள்ளிட்ட பலரும் நகரில் குப்பைகள் 15 நாட்களுக்கு மேலாக எடுக்கப்படாமல் மூட்டை மூட்டையாக கிடைக்கின்றன.

இதனால் பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சுகா தாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.

குப்பைகள் எடுக்கப்படாததால் கவுன்சிலர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எங்களால் பொதுமக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை உடனடியாக குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்தனர்.

பாலமுருகன் பேசுகையில், ஈமகிரிகை மண்டபம் பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகையில், குப்பைகளை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

கால்நடைகள், பன்றிகளை பிடிக்க உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கின்றனர்.

அவ்வாறு பிடித்தால் சில உறுப்பினர்களே போராடும் மக்களுக்கு துணை போகின்றனர். இவ்வாறு செயல்படும் உறுப்பினர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News