உள்ளூர் செய்திகள்

சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.

திறந்தவெளி சேமிப்பை கிடங்கை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை திரும்ப பெற வலியுறுத்தல்

Published On 2022-07-15 09:36 GMT   |   Update On 2022-07-15 09:36 GMT
  • தற்போது வாணிபக்கழக நிறுவனமே லாரிகளை அனுப்பும்போது லாரி டிரைவர்களுக்கு மாமுல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
  • தனியார் நிறுவனத்திடம்ஒப்படைக்கப்பட்டால் இது மேலும் அதிகமாகும்.

பூதலூர்:

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படவும் குறைந்த விலையில் ஏழை எளிய மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் 1972ம் ஆண்டுஅப்போதய முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்.

தமிழ்நாட்டில் அனைத்து கிராம பகுதிகளிலும் ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருள் விநியோகம், விவசாயிகளிடம் விளைவிக்கப்படும் நெல் கொள்முதல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்து கொண்டுள்ளது. இந்தியாவிலேயே சிறப்பான முறையில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்களை விநியோகம் செய்து வருவது தமிழகம் தான் என பாராட்டப்படும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பணியாற்றி வருகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தமிழ்நாட்டில் பெருவாரியாக விளைவிக்கப்படும் நெல்லை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து அரவை மில்களுக்கு அனுப்பி அரிசி ஆக்கி பொது விநியோகத் திட்ட கடைகளுக்கு அனுப்புவது வரை பணிகளை செய்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நடப்பு ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வெளியிட்டுள்ள ஒப்பந்த புள்ளி கோரும் அறிவிப்பு விவசாயிகளையும், முன்னோடிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இனிவரும் காலங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்க ஒப்பந்த புள்ளியில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ஒப்பந்த புள்ளியில் கோரப்பட்டுள்ளது.

இதுவரை கொள்முதல் பணிகள், கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை எடுத்துச் சென்று சேமிக்கும் பணிகள், உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமே செய்து வந்த நிலையில், திடீரென சேமிப்பு கிடங்குகளை தனியார் வசம் ஒப்படைப்பது, எதிர்காலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தையே தனியார் மயமாக்கும் முயற்சியோ? என விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறிவருகின்றனர்.இது போன்ற நிலையில், தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தால் கூடுதலாக சிரமங்களைசந்திக்க வேண்டி இருக்குமே தவிர நன்மை எதுவும் ஏற்படாது என்று விவசாயிகள்.பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது வாணிபக்கழக நிறுவனமே லாரிகளை அனுப்பும்போது லாரி டிரைவர்களுக்கு மாமுல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.தனியார் நிறுவனத்திடம்ஒப்படைக்கப்பட்டால் இது மேலும் அதிகமாகும். குறைவதற்கான வாய்ப்பு இல்லை. இதை ஈடுகட்ட விவசாயிகளிடம் கூடுதலாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணம் பெறுவதற்கான நிலை ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.கொள்முதல் நிலையங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெறப்படும் தொகை குறித்ததகவல்கள்வாணிபக்கழகத்தின்அனைத்துஉயர்அலுவலர்களுக்கும்தெரியும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் தெரிவித்ததாவது;- நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குளில் சேமித்து வைத்து அரிசி அரவைக்கு அனுப்புவது வழக்கம்.

தற்போது அந்த திறந்த வெளி கிடங்குகளை தனியாருக்கு தாரை வார்த்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதனால் கொள்முதல் நிலையங்களில் லாரி மாமூல் ரூ 4000 விருந்து ரூ.6000 ஆக உயரும். இது விவசாயிகளின் தலையில் வைத்து சிப்பத்திற்கு ரூ.60 வசூலிக்கும் நிலை வரும். சில மாதங்களுக்கு அரசு பராமரிப்பில் இருந்த கிடங்குகளில் பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் முளைத்தது.குறிப்பாக திருவாரூர் கிடங்கில் 40 ஆயிரம் மூட்டைகள் முளைத்தே போனது.

தனியார் வசம் கிடங்குகள் போவதால் அன்றாடம் உழைக்கும் ஏழை அடித்தட்டு மக்கள், ஏழை விவசாயக்கூலி தொழிலாளர்களுக்கு மோசமான தரமற்ற அரிசியை அரசே விநியோகிக்கும் நிலை ரத்த வியர்வை சிந்திய உழைப்பு, விவசாயிகளின் உணர்வு, பலருக்கும் பகர்ந்தளிக்கும்உணவு, இது ஆற்றில் ஓடும் மணல் அல்ல. இதை தன் மக்களின் வயிற்று பிரச்சினை. நெல் சேமிப்பு தனியாருக்கு போனால் தரமற்ற அரிசி விநியோகித்துஅல்லல்படநேரிடும். மேலும்பலவிதங்களிலும்விவசாயிகள், வாங்கி உண்போர்பாதிப்படைவார்கள். இதனால் காலரா, வாந்தி-பேதி, கொரோனா போன்ற கொடிய நோய்காளால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

சேமிப்பு கிடங்கு தனியார் வசம் போவதால் ஆயிரக்கணக்கான அப்பாவி தற்காலிக சுமை தூக்கும் பணியாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே நெல் சேமிப்பு கிடங்குகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு அரசே பராமரித்து ஏழைகளின் நலம் காக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News