உள்ளூர் செய்திகள்
நாகை தாமரைக்குளம் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் ஆய்வு
- சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.
- விரைவில் தாமரை குளம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக விளங்கும் தாமரைக்குளம் சிதிலமடைந்து உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
அங்கு சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.
இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷாநவாஸ் அங்கு நேரில் ஆய்வு செய்து, விரைவில் தாமரைக் குளம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து
விடப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.