உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த காட்சி.

உடுமலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Published On 2022-06-28 06:38 GMT   |   Update On 2022-06-28 06:38 GMT
  • உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள 125 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
  • வாகனத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்பட்டுள்ளதா, ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதா என பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

உடுமலை :

தனியாா் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள 125 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

வருவாய் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், டி.எஸ்.பி., தேன்மொழிவேல், உடுமலை மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜெயந்தி, தீயணைப்பு நிலைய அலுவலா் கோபாலகிருஷ்ணன் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோா் இந்த பணிகளை மேற்கொண்டனா்.அப்போது ஒவ்வொரு பள்ளி வாகனங்களும் தனித்தனியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இதில் வாகனத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்பட்டுள்ளதா, ஓட்டுநா்களுக்கு உரிமம் புதுபிக்கப்பட்டுள்ளதா, ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதா என பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் தகுதியற்ற வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News