கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணிகள் ஆய்வு
- கழிவுநீர் வெளியேறி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
- பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டைகாளியம்மன் கோயில் தெருவில், பழைய பேருந்துநிலையகட்டண கழிவறை கழிவுநீர் வெளியேறி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதியடை ந்துவந்தனர்.
இதற்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தியதின்பேரில் அப்பகுதி நகர்மன்ற உறுப்பி னர் சாமிநாதன் நகர்மன்ற தலைவர் துர்காராஜ சேகரனிடம் கோரிக்கை வைத்தார்.
அதன்படி கட்டண கழிவறை கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க நகராட்சி சார்பில் கழிவுநீர் தொட்டி அமைத்திடவும் கட்டண கழிவறை சுற்றுசுவர் அமைத்திடவும் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு பொதுநிதியில் ரூ.5லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து பணிகள் தொடங்கிட நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், முபாரக், தேவதாஸ் உடனிருந்தனர்.