உள்ளூர் செய்திகள்

கொப்பரை தேங்காய் கொள்முதல் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் (வணிகம்) முரளிதரன் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வேளாண் அதிகாாரி ஆய்வு

Published On 2023-05-21 09:12 GMT   |   Update On 2023-05-21 09:12 GMT
  • விற்பனை கூடங்களின் செயல்பாடுகள் மற்றும் மின்னணு தேசிய வேளாண் சந்தை ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.
  • தேங்காய் பால் உற்பத்தி அலகு மற்றும் கிடங்குகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனன மற்றும் வேளாண் வணிகத் துறைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனனக்குழுவில் இனண இயக்குநர் (வேளாண் வணிகம்) முரளிதரன், தஞ்சாவூர், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது விவசாயிகளின் ஆவண ங்களை சரிபார்த்ததுடன் ஒரத்தநாடு ஒழுங்கு முறை விற்பனை கூட பகுதிக்கு ட்பட்ட சோழகன்குடிக்காடு மற்றும் பாலாமுத்தூர் கிராமங்களில் கொப்பரை விற்பனை செய்த விவசாயிகளின் வயலிற்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் கொப்பரை கொள்முதல் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் விற்பனை கூடங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் மின்னணு தேசிய வேளாண் சந்தை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விற்பனைக்கூட பொறுப்பாளர்களுக்கு விவசாயிகளின் பண்ணை வயலிற்கு சென்று தினசரி பரிவர்தனை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் உழவர் சந்தை, ஒரத்தநாட்டில் அமைந்துள்ள திருநாடு உழவர் உற்பத்தி யாளர் குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், இயந்திர தளவாடங்கள், காயர் அலகு, தேங்காய் பால் உற்பத்தி அலகு மற்றும் கிடங்குகள் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டு தென்னை வணிக வளாகத்தினை முழு செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் தென்னை வணிக வளாகத்தில் அமைந்துள்ள கட்டமைப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வில் விற்பனனக்குழு செயலாளர் சரசு, வேளாண் வணிக துனண இயக்குநர் வித்யா, விற்பனனக்குழு மேலாளர் சரண்யா, விற்பனனக்கூட பொறுப்பாளர்கள் முருகானந்தம் , சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News