நெல்லையில் வடகிழக்கு பருவமழை தீவிரம்- பேரிடர் பணிகளை துரிதப்படுத்திய மாநகராட்சி கமிஷனர்
- பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
- தூர்வாரும் பணிகளை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்
நெல்லை:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். இதில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகர பகுதி களில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகள், ஓடை தூர்வாருதல், சாக்கடை கால்வாய்கள் சீரமைத்தல் போன்ற பணிகளை விரைவுப்படுத்த அதிகாரி களுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தர விட்டார். மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் தெரிவித்தார்.
அப்போது நெல்லை மாநகர பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான எஸ்.என்.ஹைரோடு, பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை, சமாதானபுரம் சாலை, திருமால் நகர் சாலை உள்ளிட்டவை உள்ளது. இதில் பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக வாகன போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அதேபோல் திருமால் நகர் சாலையும் பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால் மாநகரப் பகுதிகளுக்குள் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைக ளையும் மாநகராட்சிக்கு மாற்றிக் கொடுத்தால் உடனடியாக சீரமைத்து மாநகராட்சி முழுவதும் தரமான சாலைகள் பொது மக்கள் பயன்படுத்தலாம் என கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி கூறினார்.
தொடர்ந்து அமைச்சரின் உத்தரவுக்கு இணங்க நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் ஓடைகளை சீரமைத்து தூர்வாரும் பணிகளை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
மாநகராட்சி கமிஷனரின் இந்த நடவ டிக்கைகளை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.