வேதாரண்யம் பகுதியில் பனங்கிழங்கு எடுக்கும் பணி தீவிரம்
- வேதாரண்யம் பகுதியில் விவசாயிகள் பனங்கிழங்கு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- சர்க்கரை நோயாளி–களுக்கு மிகவும் உகந்தது, நார் புரதசத்து நிறைந்தது, மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் விவசாயிகள் பனங்கிழங்கு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் தமிழர்களின் பாரம்பரிய உணவாகவும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடியது பனங்கிழங்கு.
சர்க்கரை நோயாளி–களுக்கு மிகவும் உகந்தது. நார், புரதசத்து நிறைந்தது.
மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.
மருத்துவ குணம் வாய்ந்த இந்த பனங்கிழங்கு சாகுபடி கடலோர கிராமங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் பனங் கொட்டைகளை நன்றாக காய வைத்து மணல் தீட்டுகளை புதைத்து வைத்து விடுகின்றனர்.
மூன்று மாதத்தில் பனங்கிழங்கு மணலுக்கு அடியில் உருவாகி வளர்ந்து விடும்.
மார்கழி மாதத்தில் அந்த கிழங்கு–களை விற்பனைக்கு தயாராகிவிடும்.
பனங்கிழங்கு விவசாயி–களுக்கு செலவு இல்லாமல் செய்யும் சாகுபடியால் நல்ல லாபம் கிடைக்கிறது.
பனங்கோட்டையில் இருந்து மணலில் தானாக வளர்ந்து விவசாயிகளுக்கு அதிக லாபத்தை தரும் இந்த சாகுபடியில் உற்பத்தி செலவு கிடையாது.
தற்போது வேதாரண்யம் பகுதியில் கோடியக்கரை, கோடியக்காடு, ஆயக்காரன்புலம், நெய் விளக்கு, குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பனங்கிழங்கு சாகுபடி நடைபெற்று உள்ளது.
தற்போது அதனை உள்ளூர் வியாபாரிகளும் வெளியூர் வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
ஒரு பனங்கிழங்கு ரூ.1 முதல் 2 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது இந்த பனங்கிழங்கை கொண்டு மதிப்புகூட்டல் பொருளாக செய்து நல்ல விலைக்கு விற்று வருகின்றனர்.