உள்ளூர் செய்திகள்

நாசரேத்தில் சர்வதேச ஓசோன் தினம்

Published On 2023-09-18 09:04 GMT   |   Update On 2023-09-18 09:04 GMT
  • நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில் சர்வதேச ஓசோன் தினம் நடைபெற்றது.
  • இதில் கலந்து கொண்டவர்கள் இயற்கைப் பாதுக்காப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

நாசரேத்:

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் சார்பாக நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில் சர்வதேச ஓசோன் தினம் நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஓசோன் படலத்தின் தன்மைகள் அவற்றுள் ஏற்பட்டுள்ள சேதங்கள், ஓசோன் படலத்தினை காப்பதற்கான வழிமுறைகள் போன்றவைகளை துறையின் இயக்குநர் ஜாண்சாமுவேல் எடுத்துரைத்தார். இதில் பங்கு பெற்றவர்கள் இயற்கையை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

விழாவின் நிறைவில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் இயற்கைப் பாதுக்காப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்திச் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் இயக்குநர் ஜாண் சாமுவேல் செய்திருந்தார்.

Tags:    

Similar News