பாளை சாரதா கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு
- நெல்லை இந்துக்கல்லூரி உதவி பேராசிரியர் வேல்மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- ‘டிஜிட்டல் சிந்தனை திறனுடனான பெருந்தரவு பகுப்பாய்வு’ பற்றி செல்வக்குமார் சாமுவேல் உரையாற்றினார்.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) கணினி பயன்பாட்டு துறையில் வயர்லெஸ் மற்றும் மொபைல் நெட்வொர்க் பாதுகாப்பு என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவண பிரியா அம்பா ஏற்பாட்டில், கல்லூரி இயக்குனர் மேஜர் சந்திரசேகவன் வழிகாட்டுதலுன் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கமலா, கணினி பயன்பாட்டுத்துறை உதவி பேராசிரியர் பார்வதி தேவி ஆகியோர் வரவேற்று பேசினர். சிறப்பு விருந்தினராக நெல்லை இந்துக்கல்லூரி அறிவியல் துறை உதவி பேராசிரியர் வேல்மணி கலந்து கொண்டு சுற்றுப் புற நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். 2-வது அமர்வில் ஆசிய பசிபிக் தொழில்நுட்ப பல்கலைக்கழக இணை பேராசிரியர் செல்வக்குமார் சாமுவேல், 'டிஜிட்டல் சிந்தனை திறனுடனான பெருந்தரவு பகுப்பாய்வு' பற்றி உரையாற்றினார். 3-வது அமர்வில் சுஜாதா கிருஷ்ணமூர்த்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சீனா 'கம்பியில்லா தொலைத்தொடர்பில் நிகழ் ஆராய்ச்சிகள்' பற்றி உரையாற்றினார். பல்வேறு கல்லூரிகளில் இருந்து 55 மாணவிகள், ஆராய்ச்சி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டதுடன் ஆராய்ச்சி கட்டுரைகளையும் வழங்கினர். முடிவில் கணினி பயன்பாட்டுத்துறை உதவி பேராசிரியர் சுடர்வேணி என்ற சுபா நன்றி கூறினார்.