உள்ளூர் செய்திகள்

வேளாண்மை அட்மா திட்டத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2023-01-13 07:44 GMT   |   Update On 2023-01-13 07:44 GMT
  • 15 தற்காலிக காலிப் பணியிடங்களுக்கும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொண்டு பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
  • கணக்காளர் மற்றும் எழுத்தர் பதவிக்கு பி.காம் பட்டப் படிப்பு மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்கீழ், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி தேர்வு முகமை மூலம், வட்டார அளவில் காலியாக உள்ள, 2 வட்டார தொழில் நுட்ப மேலாளர் மற்றும் 12 உதவி தொழில் நுட்ப மேலாளர்கள், ஒரு கணக்காளர் மற்றும் எழுத்தர் என 15 தற்காலிக காலிப் பணியிடங்களுக்கும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் கொண்டு பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் பணியிடத்திற்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை மருத்துவ அறிவியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்புடன் கணினி இயக்கம் திறன் பெற்று இருக்க வேண்டும். உதவி தொழில் நுட்ப மேலாளர்களுக்கான பணியிடங்களுக்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொருளாதாரம், கால்நடை மருத்துவ அறிவியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களில் இளநிலை பட்டப்படிப்புடன் கணினி இயக்கத் திறன் முடித்திருக்க வேண்டும். கணக்காளர் மற்றும் எழுத்தர் பதவிக்கு பி.காம் பட்டப் படிப்பு மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இந்தபணியிடங்கள் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்படும். அரசு நிர்ணயித்துள்ள தொகுப்பூதியம் வழங்கப்படும். எனவே, அனுபவம் வாய்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பணி நியமன முகமைகள், தங்களது முகமையின் அடிப்படை விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை திட்ட இயக்குநர்(வே.தொ.மே.மு), வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், நெ. 1, செரி ரோடு, திருவள்ளுவர் சிலை அருகில், சேலம் மாவட்டம்-636 001 என்ற முகவரிக்கு 10 நாட்களுக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News