உள்ளூர் செய்திகள் (District)

நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்

Published On 2022-10-23 07:31 GMT   |   Update On 2022-10-23 07:31 GMT
  • சனிப்பிர தோஷத்தை யொட்டி சுவாமி -அம்பாள் மற்றும் நந்திக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது.
  • பிரதோஷத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர்.

கடையம்:

கடையம் நித்திய கல்யாணி அம்பாள் உடனு றை வில்வவன நாத சுவாமி கோவிலில் சுவாமி அம்பாளுக்கு வருடந்தோறும் ஐப்பசி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் சனிப்பிரதோஷத்தை யொட்டி சுவாமி -அம்பாள் மற்றும் நந்திக்கு மஞ்சள் அபிஷேகம், தயிர் அபி ஷேகம், பால் அபிஷேகம், தேன் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பன்னீர் அபி ஷேகம், இளநீர் அபிஷேகம், விபூதி அபிஷேகமும் நடை பெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரம்,ஆராதனைகள் நடைபெற்றது.

பிரதோஷத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர்.

சுவாமி- அம்பாள் திருக்கல்யாணத்தை கல்யாணசுந்தர பட்டர் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரி சனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News