உள்ளூர் செய்திகள்
குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இவ்விழாவானது 10 நாட்கள் நடைபெறுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் தொடக்க நாளில் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவானது 10 நாட்கள் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்குற்றாலநாதசுவாமியை தரிசனம் செய்தனர்.