மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
- ஆங்கில, தமிழ் படிப்பு திறன்களை ஒவ்வொரு மாணவரையும் வாசிக்க சொல்லி கேட்டறிந்தார்.
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் போதுமான இருப்பு உள்ளதா?
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா எனவும், மருந்து, மாத்திரைகள் போதுமான இருப்பு உள்ளனவா எனவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருகிறார்களா எனவும, பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கலந்துரையாடி சரியான, முறையான சிகிச்சை வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர், வைத்தீஸ்வரன்கோயில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2 மணி நேரம் அங்கேயே இருந்து பயிலும் மாணவர்களிடம் ஆங்கில படிப்பு திறனையும், மற்றும் தமிழ் படிப்புத் திறனையும் வாசிக்க சொல்லி ஒவ்வொரு மாணவரையும் கேட்டறிந்தார்.
பின்னர், மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவு பொருட்களின் தரத்தினை நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) பாபு, சீர்காழி வருவாய் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உடன் இருந்தனர்.