உள்ளூர் செய்திகள்

இருகூரில் ஐ.டி. ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை

Published On 2022-09-05 09:44 GMT   |   Update On 2022-09-05 09:44 GMT
  • கடந்த 10 மாதங்களாக அருள்குமார் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார்.
  • கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்கின்றனர்.

கோவை

கோவை இருகூர் அருகே உள்ள சிவசக்தி நகரை சேர்ந்தவர் அருள் குமார் (வயது 32 ). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 மாதங்களாக அருள்குமார் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெள்ளலூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், செயின், தங்க நாணயம், கைச்செயின், நெக்லஸ், வளையல் உள்பட 17 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

வீட்டிற்கு திரும்பிய அருள்குமார் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கொள்ளையர்கள் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் புகார் என்பதில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News