உள்ளூர் செய்திகள்

நாளை மறுநாள் மழை பெய்யும் வானிலை ஆய்வு தகவல்

Published On 2022-07-25 09:48 GMT   |   Update On 2022-07-25 09:48 GMT
  • இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை மறுநாள் (27-ந்தேதி) பெய்யக்கூடும்.
  • இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை மறுநாள் (27-ந்தேதி) பெய்யக்கூடும்.

சேலம்:

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை மறுநாள் (27-ந்தேதி) பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 28, 29-ந்தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News