பண்ருட்டியில் பலாப்பழம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் நல சங்கம் தொடக்கம்
- தமிழ்நாடு பலா பழம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் நல சங்கம் தொடக்க விழா நடந்தது
- சங்க தலைவர் சி. ஆர். மாயவேல் விழாவிற்கு தலைமை வகித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு பலா பழம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் நல சங்கம் தொடக்க விழா நடந்தது சங்க தலைவர்சி. ஆர். மாயவேல் விழாவிற்கு தலைமை வகித்தார். துணைத்தலைவர் கே.பாலமுருகன்மு ன்னிலை வகித்தார். செயலாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். கவுரவ தலைவர் சூசைமரி சங்கப் பெயர் பலகையை திறந்து வைத்தார் துணைச் செயலாளர் கே .ஆர். விஜயகுமார், பொருளாளர்ஏ.டி. சுந்தரமூர்த்தி, தியாகி டிரான்ஸ்போர்ட் அதிபர் காமராஜ் மற்றும் புதிய நிர்வாகிகள் பலா கமிஷன் மண்டி அதிபர்கள் திரளாக கலந்து கொண்டனர் .
கூட்டத்தில் பலா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். விவசாயிகள் பலா காய்களை பலா மார்க்கெட்டில் பலா கமிஷன் மண்டி மூலம் மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.சங்கத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி,மாமுல்,மேஸ்திரி மற்றும் சுமை தூக்கும் தொழிலாளிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். கூலி, மாமூல் ஆகியவைகளை வியாபாரிகளிடம் கேட்கக் கூடாது. பலா கமிஷன் மண்டிஉரிமையாளர்க ளிடம் மட்டும் கேட்டுவாங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது. முடிவில்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்குசங்க அடையாள அட்டைவழங்கப்பட்டது.