உள்ளூர் செய்திகள்

ஜெயின் சமூகத்தினர் மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஜெயின் சமூகத்தினர் மனு

Published On 2023-01-12 09:10 GMT   |   Update On 2023-01-12 09:10 GMT
  • புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான, சம்மேத சிகர்ஜி, பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
  • அறிவிப்பை திரும்ப பெற கோரி ஜெயின் சமூகத்தினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தரங்கம்பாடி:

ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலா மையங்களாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து, அமைதி பேரணியாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சம்மேத சிகர்ஜி, குஜராத் மாநிலம் பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்பை திரும்ப பெற கோரி ஜெயின் சமூகத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடு–துறை, சீர்காழி, செம்ப–னார்கோயில், குத்தாலம், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயின் சங்கம் சார்பில் ரமேஷ் ஜெயின் தலைமையில் விபின் ஜெயின், ராஜூவ் ஜெயின், ரஞ்ஜித் ஜெயின், ரௌனிஸ் ஜெயின், உள்ளிட்ட ஜெயின் சமூகத்தினர் அமைதி பேரணி நடத்தினர்.

மயூரநாதர் தெற்கு வீதியில் இருந்து துவங்கிய அமைதி பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜியிடம் மனு அளிக்கப்பட்டது.

பேரணியில் பங்கேற்ற–வர்கள் தங்கள் கோரிக்கைகளை வலி–யுறுத்தியும், பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News