உள்ளூர் செய்திகள்

தருமபுரியை அடுத்துள்ள தடங்கத்தில் நாளை பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதை காணலாம்.

தடங்கம் கிராமத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

Published On 2023-01-20 10:15 GMT   |   Update On 2023-01-20 10:15 GMT
  • தடங்கம் கிராமத்தில் நாளை மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
  • அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ெதாடங்கி வைக்கிறார்.

தொப்பூர், 

தருமபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் நாளை மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் சுமார் 700 காளைகளும் 700 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியினை தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ெதாடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

தொலைக்காட்சிகளில் மதுரையில் மட்டுமே நடைபெறும் ஜல்லிக்கட்டுகளை பார்த்து வந்த நிலையில் தருமபுரியிலும் மக்கள் நேரடியாக பார்பதற்காகவும் தமிழர்களின் வீர விளையாட்டை தமிழகம் முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழர்களின் வீர விளையாட்டு நாளை தடங்கத்தில் நடைபெற உள்ளது. போட்டியை காண்பதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வருகை தரும் வேளாண் மற்றும் உழவு நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள், கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தீயணைப்பு துறையினர், மருத்துவக் குழுவினர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரையும் ஜல்லிக்கட்டு போட்டியை காண தடங்கம் ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் சார்பில் வருக வருக என வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News