உள்ளூர் செய்திகள்

நெல்லையில் இன்று மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனை

Published On 2023-11-26 09:11 GMT   |   Update On 2023-11-26 09:11 GMT
  • கெட்வெல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
  • கனமழையின் காரணமாக சந்தைகளுக்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

நெல்லை:

கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக நெல்லையில் இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

விறுவிறுப்பான விற்பனை

நெல்லை மாவட்டத்தின் பிரதான மொத்த மலர் சந்தையான நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கெட் வெல் பூ மார்க் கெட்டில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விற்பனை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சந்தைகளுக்கு வரும் பூக்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

விலை உயர்வு

குறிப்பாக மல்லிகை மற்றும் பிச்சி பூக்கள் நெல்லை மாவட்டம் மானூர், அழகிய பாண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந் தும், தென்காசி மாவட்டம் மாறாந்தை பகுதிகளில் இருந்தும் நெல்லை பூ மார்க்கெட்டுக்கு விற்ப னைக்கு வருவது வழக்கம்.

தற்போது மழையின் காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்து வரத்து குறைவாக இருந்தது. பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களின் காரணமாக பூக்களின் தேவை அதிகரிப்பு இருந்து வருவதால் பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

மல்லிகை பூ

அதன்படி நெல்லை சந்திப்பு மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு இன்று விற்பனையானது.

பிச்சிப்பூ ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்ப னை செய்யப்பட்டது. இதே போல் கேந்தி பூ ரூ.100-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.150-க்கும் விற்பனையானது.

Tags:    

Similar News