மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்கு உரிய நீதி கிடைக்க செய்ய வேண்டும்
- ஸ்ரீமதி தொடர்பான வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார்கள் எனவே அந்த நீதிபதிகளாவது நல்ல ஒரு தீர்வை வழங்க வேண்டும்.
- நிபுணர் குழுவினர் கருத்தைக் கேட்டு தவறாக நீதி வழங்குவது பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்துவிடும்.
நாகப்பட்டினம்:
முக்குலத்து புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் ஆறு.சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது,
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்த ஸ்ரீமதி மரணம், தற்கொலை எனவும் கொலையோ அல்லது பாலியல் துன்புறுத்தலோ இல்லை என உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தை தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள்.
நீதிமன்றங்கள் இப்படி தவறுதலான ஒரு நீதியை வழங்கினால் மக்கள் நீதிமன்றங்கள் மீது உள்ள நம்பிக்கை இல்லாமல் போய் விடும்.
நிபுணர் குழுவினர் கருத்தைக் கேட்டு தவறாக நீதி வழங்குவது பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்துவிடும்.
தமிழக முதல்வர் ஸ்ரீமதி உயிரிழப்புக்கு உரிய நீதியையும் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
அதே போல ஸ்ரீமதி தொடர்பான வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார்கள்.
அந்த நீதிபதிகளாவது நல்ல ஒரு தீர்வை வழங்க வேண்டும்.
தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் ஒண்டிவீரன் விழாவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதேபோல புலித்தேவன், மருது பாண்டியன் மற்றும் ஆக.30 நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த மன்னர்கள் மற்றும் மாவீரர்களின் புகழை பரப்புவதற்கு எல்லா மக்களும் நேரில் சென்று பார்த்து வழிபட வேண்டும்.
ஆனால் அவர்கள் வழிபடாத அளவிற்கு தமிழக அரசு 144 உத்தரவை பிறப்பிப்பதாகவும், அதிமுக அரசு தொடர்ச்சியாக இந்த 144 தடை உத்தரவை செய்திருந்தது.
திமுக அரசு 144 தடை உத்தரவை அகற்ற வேண்டும் என்றார்.
புலித்தேவனின் 307வது பிறந்தநாள்
நெல்லை சீமையை ஆண்டு வெள்ளையரை எதிர்த்து போரிட்ட முதல் சுதந்திரப் போராட்ட மாமன்னர் பூலித்தேவனின் 307வது பிறந்தநாளை ஒட்டி நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் பூலித்தேவனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட மாவீரன் பூலித்தேவனுக்கு அரசின் சார்பில், சென்னை தலைநகரில் உருவச்சிலை அமைக்க வேண்டும்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பூலித்தேவன் விழாவுக்கு போடப்படும் 144 தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.