உள்ளூர் செய்திகள்

கடனா அணையில் இருந்து கலெக்டர் ஆகாஷ் தண்ணீரை திறந்து வைத்த காட்சி.

ராமநதியை தொடர்ந்து கடனா அணையில் கார் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு- 9,923 ஏக்கர் பாசனம் பெறும்

Published On 2022-07-26 09:06 GMT   |   Update On 2022-07-26 09:06 GMT
  • கடனா அணையில் இருந்தும் கார் சாகுபடிக்காக தண்ணீரை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார்.
  • நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை 110 நாட்களுக்கு கடனாநதி அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

கடையம்:

தென்காசி மாவட்டத்தின் பிரதான அணைகளான கடனாநதி மற்றும் ராமநதி அணைகள் மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

அணை திறப்பு

மாவட்டத்தில் கார் சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால் ராமநதி அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கடனா அணையில் இருந்தும் கார் சாகுபடிக்காக தண்ணீரை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார்.

இதன் மூலம் கடனாநதி அணை பாசனத்திற்கு உட்பட்ட அரசபத்து, வடகுறுவப்பத்து, ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர் கால், காங்கேயன்கால் ஆகியவை மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

9923 ஏக்கர்

வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை 110 நாட்களுக்கு கடனாநதி அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கன அடி வீதம் 664.60 கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தம் 9923 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற திட்ட மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்பி. ராஜா, உறுப்பினர்கள் சதன் திருமலை குமார், ஷா நவாஸ், ராஜ்குமார், பழனி நாடார் எம்.எல்.ஏ., கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், மகேஷ்மாயவன், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் முருகேசன், ராஜேந்திரன், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News