உள்ளூர் செய்திகள்

கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

Published On 2023-07-20 08:44 GMT   |   Update On 2023-07-20 08:44 GMT
  • கடந்த 7 மாதங்கள் கடையநல்லூர் நகராட்சிக்கு புதிதாக நிரந்தர ஆணையாளர் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது.
  • இதையடுத்து புளியங்குடி நகராட்சியில் பணியாற்றிய சுகந்திக்கு பதவி உயர்வு அளித்து கடையநல்லூர் முதல் நிலை நகராட்சி ஆணையராக தமிழக அரசு நியமனம் செய்தது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன் கடந்த ஜனவரி மாதம் தலைமை செயலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அன்று முதல் கடந்த 7 மாதங்கள் கடையநல்லூர் நகராட்சிக்கு புதிதாக நிரந்தர ஆணையாளர் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர்கள் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளராக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தனர். கடையநல்லூர் சமூக ஆர்வலர்கள் நகராட்சிக்கு நிரந்தரமான புதிய ஆணையாளர் நியமிக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புளியங்குடி நகராட்சியில் பணியாற்றிய சுகந்திக்கு பதவி உயர்வு அளித்து கடையநல்லூர் முதல் நிலை நகராட்சி ஆணையராக தமிழக அரசு நியமனம் செய்தது. இதனைத்தொடர்ந்து நேற்று கடையநல்லூர் நகராட்சி ஆணையராக சுகந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகராட்சி பொறியாளர் ஜீவா, இளநிலை பொறியாளர் முரளி, மேலாளர் சண்முகவேலு அல்லி பாத்திமா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கரன், கணக்கர் துரை, ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா மற்றும் நகராட்சி ஊழியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News