- 3-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.
- சொர்ண பைரவருக்கும், பைரவிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் பனையடிகுத்தகை பகுதியில் உள்ள மகா காலபைரவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு மருளாளிகள், தேய்பிறை அஷ்டமி உபயதாரா்கள், மார்கழி மாத உபயதாரா்கள் மற்றும் கிராமமக்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாககடந்த 20-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடந்தது.
பின்னா், 3-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, இரவு மகா தீபாராதனை, மருந்து சாத்துதல், சொர்ண பந்தனம் நடைபெற்றது.
பின்னர், காலை பரிவார தெய்வங்களுக்கு பூஜையும், புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விமானம், ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மாலை சொர்ண பைரவருக்கும், பைரவிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.