உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் மனு அளித்தார்.

கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி கட்டிட பணிகளை தொடங்க வேண்டும்: கலெக்டரிடம் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மனு

Published On 2022-07-03 08:14 GMT   |   Update On 2022-07-03 08:14 GMT
  • கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி கட்டிட பணிகளை தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
  • புதிய கட்டிடம் கட்ட 2020 ஆம் ஆண்டு சுமார் 11.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனு வில் கூறியுள்ள தாவது,:-

கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட 2020 ஆம் ஆண்டு சுமார் 11.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுநாள்வரை பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் போதிய வசதி இன்றி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. எனவே புதிய கட்டிடம் கட்டும் பணிகளை விரைந்து செயல்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News