உள்ளூர் செய்திகள்

நாற்று நடவு பணியில் ஈடுபட்ட மாணவிகள், ஆசிரியர்களை படத்தில் காணலாம்.

டவுன் வயல்பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்ட கல்லணை பள்ளி மாணவிகள்

Published On 2022-12-02 09:30 GMT   |   Update On 2022-12-02 09:30 GMT
  • கல்லணை பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் ஒருநாள் விவசாய பணியில் ஈடுபட்டனர்.
  • சாப்பிடும் போது உணவை வீணாக்காமல் இருக்க வேண்டும் என மாணவிகள் கேட்டுக்கொண்டனர்

நெல்லை:

விவசாயம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் ஒருநாள் விவசாய பணியில் ஈடுபட்டனர். டவுன் சொக்காட்டான் தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நாற்று நடவுதல், நெல் பாவுதல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் கல்லணை மாணவிகளும் விவசாய பணியை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது மாணவிகள் கூறும் போது, விவசாய பணிகளை செய்யும்போதுதான் விவசாயிகள் எவ்வளவு கடினமான பணிகளை செய்து உணவு உற்பத்தி செய்கிறார்கள் என்பது தெரிகிறது. எனவே பொதுமக்கள் சாப்பிடும் போது உணவுகளை வீணாக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து விவசாயத்தை காப்போம் என மாணவிள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News